பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம்(Indian Oil) தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் இனி வரும் காலங்களில் சமையல் எரிவாயுவுக்கு முன்பதிவு செய்த அடுத்த நாளிலே டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
உடனடி சிலிண்டர் டெலிவரி பெறுவது எப்படி?
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் அதன் பயன்பாடு மிகவும் எளிதாக உள்ளது.மேலும் இது நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்றியமையாததாக உள்ளது.தற்போது சமையல் எரிவாயு விலையும் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு அதன் மீது விதிக்கப்படும் அதிக வரியும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது அதன் விலை 900 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதற்கு மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமேசான்(Amazon) போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் 1 மாத காலம் வரை பயன்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் நம் உபயோகிப்பதை பொறுத்து தான் அதனை குறிப்பிட்ட நாட்களில் பயன்படுத்தலாம்.
எனவே நமக்கு திடீரென LPG சிலிண்டர் தீர்ந்து விட்டால்நாம் பதிவு செய்தாலும், குறைந்தது மூன்று நாட்கள் மேல் ஆகும்.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட தட்கல் திட்டம்?
தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் (Indian Oil) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த தட்கல் திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை புக் செய்பவர்களுக்கு அடுத்த நாளே சமையல் எரிவாயு LPG சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் எனவும் மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.