Home Cinema குக் வித் கோமாளி புகழ் விஜய் டிவி அஸ்வின், புகழ் புதிய படம்

குக் வித் கோமாளி புகழ் விஜய் டிவி அஸ்வின், புகழ் புதிய படம்

0
Cook with Comali Ashwin Pugazh New Movie

குக் வித் கோமாளி 2வது சீசன் தற்போது முடிந்துள்ளது.இறுதி போட்டியில் கணி வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பலருக்கு வாழ்வை மாற்றிய குக் வித் கோமாளி சீசன் 2


இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு எப்படி ஒரு நல்ல பொழுது போக்காக அமைந்ததோ அதே போல் இதில் நடித்த குக்குகள் மற்றும் கோமாளிகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. உதாரணத்துக்கு சொல்ல போனால் புகழ் இதில் கோமாளியாக கலக்கி இருப்பார் அவர் முன்பெல்லாம் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரது திறமையை வெளிப்படுத்தி இருப்பார் ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத அங்கீகாரமும் புகழும் இப்பொது கிடைத்துள்ளது.

மேலும் குக் வித் கோமாளி 2-வது சீசன் காக மாஸ்டர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதையே அவர் தவிர்த்து விட்டார் அந்த அளவிற்கு இது அவருக்கு பெரும் புகழும் வாங்கி தந்தது என்று சொன்னால் மிகையாகாது. அது போல் அஸ்வின், ஷிவாங்கி, பாலா என சொல்லி கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல பேர் வாழ்க்கையை மாற்றி உள்ளது.

அஸ்வின் புகழ் காம்போ ரசிகர்கள் உற்சாகம்

அஸ்வின் மற்றும் புகழின் நட்பை பத்தி அனைவர்க்கும் தெரியும்.இப்பொது அஸ்வின் மற்றும் புகழ் சேர்ந்து படம் ஒன்று நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.இதை Trident Arts நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் இந்த படத்தை Harishankar இயக்குகிறார். இந்த செய்தியை அஸ்வின் ஒரு வீடியோ பதிவில் உறுதி செய்துள்ளார். மேலும் இப்படம் ஒரு நல்ல கதையை கொண்ட படம் எனவும் அவர் குறிப்பிட்டுஇருந்தார் அஸ்வின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் மற்றும் காமெடிக்கு புகழ் நடிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version