Home News வேலை கிடைக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசின் திட்டம் பயன்பெறுவது எப்படி?

வேலை கிடைக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசின் திட்டம் பயன்பெறுவது எப்படி?

7
TNSDC Tamil Nadu Skill Development Corporation Training

இளைஞர்களின் வேலை வாய்ப்பு தகுதி திறன்களை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) அதற்காக பல்வேறு திறன் பயிற்சி Short Term Skill Training (STT) திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறது. இதனால் எந்த ஒரு வேலைவாய்ப்பும் இல்லாமல் வேலைத்தேடும் இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சியை பெறலாம்.

TNSDC தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தரும் பயிற்சி

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ், கட்டுமானம், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் போன்ற பல தொழிற் துறைகளின் கீழ் 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைதேடும் இளைஞர்கள் அவரவர் விருப்பம் மற்றும் தகுதிகலுக்கேற்ப தொழில்துறைகளில் தங்களுக்கான பயிற்சியை தொடரலாம். இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியின் போது 80 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவுகள் பயணப்படி வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவுடன் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு பணியமர்த்தம் செய்வதற்கான எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

Tamil Nadu Skill Development Corporation Register

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் இந்த பயிற்சிக்காக விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

7 COMMENTS

  1. mildfil tadalafil tablets 5mg

    வேலை கிடைக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசின் திட்டம் பயன்பெறுவது எப்படி? – Today Tamil News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version