Home Tech உங்கள் பெயரில் எத்தனை மொபைல் நம்பர் உள்ளது என்று கண்டுபிடிக்கலாம்

உங்கள் பெயரில் எத்தனை மொபைல் நம்பர் உள்ளது என்று கண்டுபிடிக்கலாம்

0
How to check how many mobile numbers on my name
How to check how many mobile numbers on my name

பொதுவாக அனைவரும் இரண்டிற்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்துள்ளோம். மொபைல் கடைகளில் நாம் குடுக்கும் தனிநபர் ஆதார சான்றுகளை வைத்து வேறு எவராவது நம் பெயரில் மொபைல் எண் வைத்துள்ளார்களா என சந்தேகம் பலருக்கு எழும்.

அதாவது உங்கள் பெயரில் வேறு எதாவது சிம் கார்ட் இயங்குகிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

தற்போது அதற்கான வசதியை இந்திய தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான பிரத்தியேக இணையதளம் ஒன்றையும் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் அணைத்து மொபைல் எண்களின் தரவுகளும் இந்த இணைய போர்ட்டலில் பதிவு செய்யப்படும். அதனால் இந்த அவசதியின் மூலம் நீங்கள் உங்கள் சிம் கார்ட் நம்பர்களை சரிபார்த்து தவறான மொபைல் எண் இருந்தால் நீங்கள் புகார் செய்யலாம்.

அரசு தொலைத்தொடர்பு இணைய தளத்தை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் மொபைல் அல்லது கணினி லேப்டாப் ஆகியவற்றில் உள்ள பிரௌசரை பயன்படுத்தி tafcop.dgtelecom.gov.in என்ற அரசு இணையதளத்திற்கு செல்லவும்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் உள்ளது என அறிய:

  1. அரசு tafcop.dgtelecom.gov.in இணையதளத்திற்கு செல்லவும்
  2. அதில் உங்கள் பத்து இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  3. பிறகு மொபைல் எண்ணிற்கு ஒரு OTP ஒன்று வரும். அதை பதிவு செய்து சரிபார்க்கவும்.
  4. பிறகு உங்கள் பெயரில் உள்ள அணைத்து எண்களும் காட்டும்.
  5. அதில் நீங்கள் பயன்படுத்தாத எண் இருந்தால் அதை புகார் செய்யலாம்.
  6. பிறகு அந்த எண்ணை அரசு தொலைத்தொடர்பு துறை பிளாக் செய்து விடும்.

இந்த வசதி பல்வேறு இடங்களில் அறிமுகமாகியுள்ளது. கூடிய விரைவில் அணைத்து பகுதிகளிலும் செயல்படும், என்று அரசு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version