Monday, October 14, 2024

தமிழக அரசு சத்துணவு துறையில் வேலை விண்ணப்பிக்கலாம் – ரூ.12000 சம்பளம்!

சிவகங்கை மாவட்டம்‌ சத்துணவு துறை திட்ட பிரிவில், திருப்பத்தூர்‌, எஸ்‌.புதூர்‌, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ காலியாக உள்ள கணினி இயக்குபவர்‌ போன்ற பணியிடங்களை நிரப்ப புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, மொத்தம் 4 கணினி இயக்குபவர்‌ பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு துறை வேலை 2022 கல்வி தகுதி:

தற்காலிக கணினி இயக்குபவர்‌ வேலைக்கான கல்வித்‌ தகுதிகள்‌ விவரம்

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால்‌ ஒரு பட்டம்‌ (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்‌.
  • கணினியில்‌ MS Office அனுபவம்‌ இருக்க வேண்டும்‌.
  • Lower Grade தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

சத்துணவு துறை அலுவலக வேலைவாய்ப்பு வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.10.2022 அன்று குறைந்தபட்சம்‌ 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்‌. பொது வருப்பினர்‌ 30 வயதுக்கு மிகாமலும்‌, மிகவும்‌
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (MBC) மற்றும்‌ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (BC) பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்‌ (BCM) ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும்‌, ஆதி திராவிடர்‌ (SC) மற்றும்‌ பழங்குடியினருக்கு (ST) அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

மற்றும் இதர வகுப்பு பிரிவை சேர்ந்தமாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அறிவிப்பு.

தமிழ்நாடு சத்துணவு துறை 2022 வேலை சம்பளம்

  1. கணினி இயக்குபவர்‌ பணிக்கு மாதம்‌ ரூ.12000/- வீதம்‌ தொகுப்பூதியம் அளிக்கப்படும்
  2. இந்த பணி பகுதி நேர அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது ஆகும்‌.
  3. மேலும் இந்த பணி ஒரு வருட காலத்திற்கு மட்டுமே.

தேர்வு செய்யும் முறை

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தகுதியான நபர்களை கணினித்தேர்வு மற்றும்‌ நேர்முகத்தேர்வு மூலம்‌ தேர்வு செய்வார்‌.

பணியமர்த்தப்படும்‌ பணியாளரின் வேலை திருப்திகரமாக இருந்தால் இப்பணியிடத்திற்கு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்‌.

TN Sathunavu Department Recruitment 2022 Notification Application

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க – Click Here

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles