Saturday, September 7, 2024

10ஆம் வகுப்பு தகுதி 8326 SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு

SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு: மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8236 பல்நோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) தற்போது வெளியிட்டுள்ளது.

எனவே, இந்த பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SSC வேலைவாய்ப்பு 2024 காலியிடங்கள்:

  • பல்நோக்கு பணியாளர் MTS : 4887
  • ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) : 3439

இந்த காலியிடங்கள் மேலும் அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி வேலைவாய்ப்பு வயது வரம்பு

MTS பணிக்கு வயது வரம்பு 18 முதல் 25 ஆக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 20 ஜனவரி 1998க்கு முன்பு அல்லது 01 ஜனவரி 2005க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

Havaldar பணிக்கு வயது வரம்பு 18 முதல் 27 ஆக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02ஆகஸ்ட் 1997 க்கு முன்பு அல்லது 01 ஆகஸ்ட் 2006 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும். இதற்கான முழு விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

SSC வேலைவாய்ப்பு 2024 கல்வித் தகுதி:

10ஆம் வகுப்பு தகுதி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ரூ.100.

பட்டியல் SC மற்றும் பழங்குடியின ST விண்ணப்பதாரர்கள், பெண் விண்ணப்பதாரர், முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2024. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

SSC Recruitment 2024 Details: Click Here

Related Articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles