Saturday, April 20, 2024

அரசு வேலை தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு அரசு முதல்வரின் அறிவிப்பால் உருவாக்கப்பட்ட நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவானது தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் நம் தமிழ்நாடு இளைஞர்கள் வெற்றிபெற, இலவச பயிற்சி வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காகத் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த 2023ம் ஆண்டு இலவச பயிற்சி வகுப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி அறிவிப்பு

Railway/ SSC/ Bank Jobs ஆகிய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு Tamilnadu Skill Development Corporation தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் TNSDC கீழ் இயங்கும் பயிற்சித் திட்டமாகும்.

இந்த நான் முதல்வன் பயிற்சித் திட்டத்தின் மூலம் தகுதியுடைய போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள் விவரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்20.05.2023
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு23.05.2023
பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள்25.05.2023

மாவட்ட வாரிய 150 மாணவர்கள்:

மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பங்களை வரவேற்கின்றது.

அதன்படி 150க்கும் மேல் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்வி இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கியமாக இந்த பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் ஏதேனும் டிகிரி/ ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 35 வயது.

TNSDC Naan Mudhalvan Free Coaching Notification

SSC/ Railway/ Bank Job Exam Free Coaching – Notification

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

  1. தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்திற்கு சென்று
  2. ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  3. விண்ணப்பத்தில் சான்றிதழ் விவரங்கள் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும்.
  4. பிறகு விண்ணப்பத்தை சரி பார்த்து சப்மிட் செய்யவும்.

Tamil Nadu Government free Coaching Apply Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles