Monday, October 14, 2024

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் Tamil Nadu State Transport Corporation (TNSTC) காலியாக உள்ள 807 ஓட்டுநர் (Driver) மற்றும் நடத்துனர் (conductor) பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடடுள்ளது. இந்த பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலையும் பெற வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் 122 ஓட்டுநர்களை பணி்யமர்த்தவும்,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் SETC ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) 685 காலி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

TNSTC போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள்

  • TNSTC Driver – 122
  • Driver Cum Conductor – 685

மொத்தம் = 807 வேலைவாய்ப்பு போக்குவரத்து துறையில் அறிவிப்பு.

TNSTC Recruitment 2023: கல்வி தகுதி

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.

இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும்.

வயது வரம்பு

ஓட்டுநர் பணிக்கு 24 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

BC/MC/DNC/ SC/ST – 45 வயது வரை.

TNSTC Driver, Conductor உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்

உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, மற்றும் எடை குறைந்தபட்சம் 48 முதல் 50 கிலோ இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை சம்பளம்

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வேலை விண்ணப்பம்

டிரைவர் மற்றும் நடத்துனர் பனிக்களுக்கான விண்ணப்பம் விரைவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஆன்லைனில் வெளியிடப்படும்.

TNSTC Recruitment 2023 Application, Vacancy: FAQ

How many vacancies are available in TNSTC Recruitment 2023?

மொத்தம் 807 காலியிடங்கள் உள்ளது.

TNSTC நடத்துனர் வயது வரம்பு?

அரசு போக்குவரத்து டிரைவர், நடத்துனர் வேலைக்கு வயது 24 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

TNSTC Recruitment 2023 Online Application Link?

TNSTC அதிகாரபூர்வ இணையதளம் www.tnstc.in apply online மூலம் விண்ணப்பிக்கலாம்.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles