Saturday, September 7, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்‌

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்‌ பதிவு செய்து தற்போது வரை இருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தகுதி:

  • பத்தாம்‌ வகுப்பில்‌ தேர்ச்சியடையாதவர்களுக்கு மாதம்‌ ரூ.200
  • 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம்‌ ரூ.300
  • மற்றும் 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம்‌ ரூ.400
  • பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்‌ ரூ.600 வீதம்‌ 3 வருடத்திற்கு இந்த வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ தற்போது வரை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உதவி தொகையை விண்ணப்பதாரர்களுடைய வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படும்‌.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில்‌ வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ காத்திருப்பவராக இருக்க வேண்டும்‌. தொடர்ந்து Employment Renewal பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்‌.

வயது வரம்பு

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ SC/ ST 45 வயதுக்கு மிகாமலும்‌, Other Candidates 40 வயதுக்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பதாரரின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.72,000/- மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

தினசரி கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும்‌ மாணவ/மாணவிகளுக்கு மற்றும்‌ ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை

10ம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ கீழ்‌ படித்தவர்களுக்கு மாதம்‌ ரூ.600. 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி மாதம்‌ ரூ.750ம்‌, பட்டதாரிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ 10 ஆண்டுகள்‌ வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மையத்தில்‌ பதிவு செய்து 1வருடம்‌ நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்‌.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் Pdf

இந்த உதவித்தொகை பெறு தகுதி உள்ளவர்கள்‌ District Employment Office மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ கல்விச்‌ சான்றுகள்‌, Employment Card வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன்‌ நேரில்‌ வந்து விண்ணப்பம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விண்ணப்பங்கள்‌ அனைத்து வேலை
நாட்களிலும்‌ வருடம்‌ முழுவதும்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ இந்த உதவி தொகை பெறுபவர்களின்‌ Employment Registration ரத்து செய்யப்பட மாட்டாது எனவும்‌ இந்த உதவித்தொகை பெறுவதால்‌ வேலைவாய்ப்பு பரிந்துரை பதிவிற்கு எவ்வித தடையும்‌ ஏற்படாது.

Unemployment scholarship Scheme Application Form Download – Click Here

Related Articles

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles