Friday, April 26, 2024

தமிழக அரசு அறிவித்த 5 அதிரடி திட்டங்கள், பெண்களுக்கு இலவசம்?

தமிழ முதல்வராக பொறுப்பேற்ற திரு.மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக 5 முக்கிய உத்தரவு அரசாணைகளில் கையெழுத்திட்டார். மக்கள் அனைவரும் புதிதாக பொறுப்பேற்ற அரசு என்ன செய்யப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இந்த அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அறிவித்துள்ள அதிரடி அறிவிப்புகள் என்ன என்று தெரியுமா?

இந்த கொரோனா காலத்தில் மக்கள் குறை தீர்க்கும் விதமாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4000 தருவதாக வாக்குறுதி அறிவித்திருந்தார். தற்போது அதை நிறைவேற்றும் விதமாக முதல் தவணையில் இந்த மதமே அனைத்து அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2000 இந்த மாதத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து விற்கப்படும் என்று அரசாணை வெளியீடு.

தமிழகம் முழுதும் சாதாரண கட்டண நகர அரசு பேருந்துகளில் பணிபுரியும், உயர்கல்வி பயிலும் பெண்கள் மட்டும் அனைத்து மகளிரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்க்கு பயண அட்டை எதுவும் தேவை இல்லை. இதனால் ஏற்படும் செலவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக வழங்கும்.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி மக்களிடம் பெற்ற மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் எதற்காக தனி திட்டத்தை தொடங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோன காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மக்களின் நலன் கருதி சிகிச்சை கட்டணத்தை மருத்துவமனைகளுக்கு அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு செலுத்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles