Tuesday, October 15, 2024

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரினீவல் செய்ய தவறியவர்களுக்கு அறிவிப்பு !!

தமிழ்நாட்டில் உள்ள அரசு எம்பிளாய்மென்ட் அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், கடந்த 6 ஆண்டுகளாக புதுப்பிக்காதவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு சிறப்பு சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தகவல்களை புதுப்பிக்காதவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகவல்களை புதுப்பித்துக்கொள்ள முடியும். அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில், ‘கடந்த 2014, 2015, 2016, 2017, 2018, 2019 வரையுள்ள ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அரசு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தற்போது 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கலாம் என்று கூறியுள்ளது. இந்த கருத்தை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய 5 வருடங்களில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்காதவர்களுக்கு சில புதிய நிபந்தனைகளுடன் கூடிய அரசு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகையை பெற அடுத்த மூன்று மாதத்திற்குள்ளாக பயனர்கள் Renewal employment card online ஆன்லைனில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சலுகை ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் மற்றும் 01-01-2014 க்கு முன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த அரசாணையானது அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் உள்ள அறிவிப்பு பலகையில் பொது மக்கள் தெரிந்துகொள்ள வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

Tamil Nadu Employment Renewal Link – Click Here

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles