Thursday, April 25, 2024

மீண்டும் இணைந்த குக் வித் கோமாளி டீம்!

தற்போது வரை சமையல் நிகழ்ச்சியில் கொடி கட்டி பறந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் உள்ள கோமாளிகள் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து உள்ளனர் என்பது உலகறிந்த உண்மை. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 பற்றி பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் குக் காக இருந்த ரித்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் அந்த ஷோவில் நடித்த பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சக்தி, பாபா பாஸ்கர், பாலா, புகழ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் அடங்கிய படங்கள் இருந்தன. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அடுத்த படங்கள்.

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது வரும்?

குக் வித் கோமாளி சீசன் மூன்று பற்றி அதில் பங்கேற்ற தாமு தனியார் யூடுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கேட்டபோது வருகின்ற 2021 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles