Saturday, September 7, 2024

ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

இந்தியாவில் பிறந்த அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு அவசிய சான்றாகும். இந்நிலையில் வங்கி கணக்கு தொடங்கி அனைத்து விதமான சேவைகளுக்கும் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் தொடங்க முடியாது. அந்த அளவிற்கு இது நம் வாழ்வில் அன்றாட விஷயமாக மாறிவிட்டது. இதில் என்ன சிக்கல் என்றால் தற்போது நம் ஆதார் கார்டில் உள்ள ஏதேனும் தகவல் மாற்ற வேண்டும் என்றால் அதற்கு தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லை என்றால் நம் கோரிக்கை நிராகரிக்கப்படும். குறிப்பாக முகவரி போன்றவற்றை மாற்றும் போது தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது அந்த கவலை இல்லை. ஆம் நாம் எந்த ஒரு சான்றையும் சமர்பிக்காமல் நம் முகவரியை ஆதாரில் மாற்றி கொள்ளலாம். அதற்கு நமக்கு ஒரு முகவரி சரிபார்ப்பரின்(Address Verifier) அதாவது நமக்கு தெரிந்தவர்கள் உதவியோடு நாம் இங்கு தான் வசிக்கிறோம் என்ற ஒரு சாட்சி கடிதத்தை அனுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.

ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

  1. முதலில் ssup.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் Update Aadhaar என்று இருக்கும் அதை தேர்வு செய்யவும்.
  3. பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  4. அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாக் கோடை சரியாக பதிவு செய்யவும்.
  5. இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை அதற்கான இடத்தில் உள்ளிடவும்.
  6. அடுத்து Address update ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  7. அதில் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள (valid address proof) சரியான முகவரி ஆதாரத்தை பதிவேற்றவும்.
  8. பின்னர் அப்டேட் என்பதை தேர்வு செய்யுங்கள்.
  9. பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு (URN) எண் முகவரியை அப்டேட் செய்ததற்கான எண் ஒன்று கொடுக்கப்படும்.
  10. இந்த எண்ணை வைத்து உங்கள் அப்டேட் செய்த ஆதார் எண்ணின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆதாரில் சான்றில்லாமல் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

தற்போது ஒரு நபர் புது வீட்டிற்கு சென்றால் அவரது ஆதார் கார்டு முகவரியை புது வீடு முகவரிக்கு மாற்ற வேண்டும். இதற்கு நீங்கள் uidai.gov.in என்னும் வலைத்தளத்தில் சென்று முதலில் ‘எனது ஆதார்’ (My Aadhar) தேர்வுக்கு சென்று, உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கவும்(Update your Aadhar) என்பதை கிளிக் செய்ய வேண்டும். UIDAI இன் படி, முகவரி சரிபார்ப்பு உதவியுடன் முகவரி சரிபார்ப்பு கடிதத்தை ஆன்லைனில் அனுப்புவதன் மூலம் இதைச் செய்யலாம்.

உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கவும் கிளிக் செய்த பிறகு
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக பார்ப்போம்.

1)சீக்ரெட் கோட் வழியாக முகவரியைப் புதுப்பிக்கவும் (Update Address via Secret Code) என்பதைக் கிளிக் செய்து, சரிபார்ப்பரின் ஆதார் எண்ணைப் உள்ளிடவும். பிறகு நீங்கள் ஒரு SRN சேவை கோரிக்கை எண்ணைப் பெறுவீர்கள்.

2)சரிபார்ப்பரின் (Verifier) அவர் பெறும் இணைப்பைக் கிளிக் செய்து, அவரது / அவள் ஆதார் உடன் உள்நுழைந்து அவரது அனுமதியை வழங்க வேண்டும்.

3)இதற்குப் பிறகு,உங்கள் OTP உடன் இரண்டாவது எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் , அதை நிரப்பி கேப்ட்சாவைச் சரிபார்க்கவும். SMS மூலம் சேவை கோரிக்கை எண் (SRN) கிடைக்கும்.

4)சரிபார்ப்பால்(Verifier) வழங்கப்பட்ட அனுமதிக்கான உறுதிப்படுத்தலை அடைந்த பிறகு. நீங்கள் கொடுக்கப்பட்ட SRN உடன் உள்நுழைந்து, முகவரியை சரிப்பார்த்து, அதைத் திருத்தி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

5)இரகசிய குறியீட்டைக் கொண்ட முகவரி சரிபார்ப்புக் கடிதத்தை தபால் மூலம் பெறுவீர்கள். SSUP போர்ட்டலில் உள்நுழைந்து ரகசிய குறியீடு வழியாக உங்கள் முகவரியை புதுப்பிக்கவும். புதிய முகவரியை சரிபார்த்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும். பின்பு உங்கள் மொபைலில் ஒரு யுஆர்என்(URN) பெறுவீர்கள். அதில் கோரிக்கை நிலையை (Status) தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles