Monday, October 14, 2024

தமிழக அரசு அருமையான திட்டம் வேலைவாய்ப்புடன் படிப்பு

TAHDCO மற்றும் HCL நிறுவனம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு சலுகையை வழங்கவுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டிகிரி படிப்பு மற்றும் படிப்பு முடிந்தவுடன் உடனடி வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் இலவசப் பயிற்சி, மடிக்கணினி மற்றும் ரூ.10,000 ஊக்கத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாவது ஆண்டில் HCL நிறுவனத்தில் தங்கள் திறமைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் ஊதியத்துடன் வேலை இது மட்டுமில்லாமல் இந்தியாவின் மதிப்புமிக்க பிட்ஸ் பிளானி, சாஸ்தரா, மற்றும் அமிட்டி பல்கலைக்கழகங்களில் டிகிரி படிக்க வசதி வாய்ப்பு செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முழு கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோவே கடனாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAHDCO with HCL Graduate Employment Programme Eligibility தகுதி விவரங்கள்

இந்த திட்டமானது 2020-2021, 2021-2022 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ மற்றும் மாணவியருக்காக மட்டும் என அறிவிப்பு. விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயன் படுத்தி கொள்ளலாம்.

TAHDCO Student Registration Apply Online

விருப்பம் உள்ளவர்கள் இந்த இணையதள முகவரிக்கு சென்று http://iei.tahdco.com/register.php கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

Related Articles

1 COMMENT

  1. நான் ஒரு சிறப்பு ஆசிரியர் எனக்கு மாணவர்கள் கல்வி தான் முக்கியம் அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் அவர்கள் மாவட்டத்தில் முதல் மாணவனாக இருக்கவேண்டும் என்றுதான் என் ஆசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles