Tuesday, October 15, 2024

ஜியோ போன் Next ரூ.500 குறைந்த விலை சூப்பர் ஸ்மார்ட்போன்

இந்தியாவின் நம்பர் பணக்காரரும் தொழிலதிபருமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது புதிதாக மலிவு விலை ஸ்மார்ட் போன் அறிமுகபடித்தியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் கூட்டாக இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவின் முதல் முறை ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களுக்கு தயாரித்ததாகும். அதனால் இதன் விலையும் குறைவு தான்.

ஜியோபோன் அறிமுகம்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்தர பொது கூட்டத்தில் அவரது பங்குதாரர்களுக்கு அவர் கூறுகையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் நம் நாட்டிற்கு அவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கூட்டத்தில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் ரிமோட் வாயிலாக கலந்து கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த ஜியோபோன்(JioPhone) இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டது (Built for India) என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஸ்மார்ட் போன் மொழிபெயர்த்தால் (Translator),வாய்ஸ் அசிஸ்டன்ட்(Voice Assistant) ,மற்றும் சிறப்பான கேமரா(super Camera quality) வசதி உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜியோ போன் விலை விவரம் மற்றும் விவரம் வெளியீடு

மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் சாதாரண மாடல் (Base Model JioPhone) ரூபாய் 5௦௦௦ எனவும் இதன் அதிக செயல் திறன் கொண்ட மாடல்(high end JioPhone) ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போன், சந்தை விற்பனைக்கு வந்துள்ளது.

வாய்ஸ் மற்றும் டாட்டா சேவைகளை சுமார் 423 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஜியோ ஆகும்.

புதிய 4 ஜி திறன் கொண்ட சாதனம், கூகிளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம்(Android OS) முன்னதை விட கூடுதலாக பயனர்கள் மிக சுலபமாக பயன்படுத்த விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகிள் கிளவுட்(Google Cloud) தொழில்நுட்பங்கள் ஜியோவின்(Jio) வரவிருக்கும் 5-G வயர்லெஸ் டாட்டா மற்றும் ரிலையன்ஸ் சில்லறை(Reliance Retail) மற்றும் ஜியோமார்ட்(Jio Mart) போன்ற ஆன்லைன் சேவைகளின் உள் தேவைகளுக்கு சேவை செய்வதற்கான அடிப்படையை கூகுள் நிறுவனம் உருவாக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ போன் நெக்ஸ்ட் வாங்குபவர்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. அதன்படி பேஸிக் மாடலை வெறும் ரூ 500 செலுத்தியும், அட்வான்ஸ்டு மாடலை வெறும் 700 செலுத்தியும் வாங்கலாம், மீதி ஈசி-இஎம்ஐ மூலமாக சொந்தமாக்கலாம்.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles