Thursday, April 25, 2024

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நாளை முக்கிய அறிவிப்பு!

TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட தேர்வுகள் குறித்து நாளை செப்டம்பர் 22 ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட வேண்டிய பழிவேறு வகையான தேர்வுகளும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள TNPSC போன்ற போட்டித்தேர்வுகளை நடத்துவது குறித்த நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதன் பின்னர் தேர்வுகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவிப்பு.

அதன்படி இந்த ஆண்டிற்கான மொத்தம் 42 தேர்வுகள் உள்ள TNPSC போட்டித் தேர்வுகளுக்கான TNPSC Annual Planner 2021 அட்டவணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதுவும் சூழ்நிலை காரணமாக கிடப்பில் உள்ளது.

கொரோனா 2 வது அலை காரணமாக மொத்தம் 38 தேர்வுகளை தேர்வு ஆணையத்தால் நடத்த முடியாமல் போனது. தற்போது தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group 2, 2(A), Group 4 போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என போட்டித்தேர்வர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக TNPSC செயலர் திரு பி. உமா மகேஸ்வரி விளக்கம் அதில், “தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்க்கான TNPSC போட்டித்தேர்வுகள் தேர்வுகால TNPSC Exam Timetable அட்டவணையில் இடம்பெற்றுள்ளவாறு நடைபெற உள்ளது. தமிழ்மொழி பாடமானது TNPSC தேர்வுகள் அனைத்திலும் கட்டாயமாக்கப்படும். இது தொடர்பாக செப்.22 நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையக் கூட்டத்தில் போட்டித்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என முடிவு செய்யப்பட இருப்பதாகவும்”.

விரைவில் தேர்வுகள் குறித்து அரசாணை வெளியிடப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles