Monday, October 14, 2024

TNPSC வேலைவாய்ப்பு 2022 ரூ.56100 சம்பளத்தில் வேலை அறிவிப்பு

மீன்வளத்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்காண அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்கின்ற (TNPSC) தற்போது வெளியிட்டுள்ளது தற்போது அதனை பற்றி காணலாம்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பாக வருடந்தோறும் நடத்தப்படும் பல போட்டி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.எனவே கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு 2022

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) சமீபத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி தமிழக அரசுத்துறையில் உள்ள காலியாக இருக்கும் உயர்மட்ட பணியிடம் முதல் முதல் நிலை பணியிடம் வரை நிரப்பப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகியவற்றை மேற்கொண்டு காணலாம்.

TNPSC Recruitment 2022 மீன்வளம்உதவி இயக்குனர்

காலியிடங்கள்:02

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2021 அன்று 33 வயது நிறைவு செய்திருக்கவேண்டும்.SC,BC,SC(A), ST, MBC(V), MBC DNC, MBC,மற்றும் BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

இந்த தேர்வுக்கான கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில்
M.Sc Zoology அல்லது Marine Biology-யில் பட்டப்படிப்பு,பிறகு M.Sc (Bio-Technology) பட்டபடிப்புடன் B.Sc அல்லது M.Sc (Zoology) அல்லது Marine Biology யில் பட்டப்படிப்பு நிறைவு செய்துருப்பது அவசியம்.

மாத சம்பளம்: ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை.

தேர்வுமுறை:

இந்த தேர்வு இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது அதன்படி அனைவரும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே எழுத்து தேர்வானது தமிழ் மொழி மற்றும் பொது அறிவு உள்ளிட்ட 2 தேர்வாக நடத்தப்படும்.இதில் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

எழுத்து தேர்வு நாள் : 12.03.2022

TNPSC Recruitment 2022, TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE பதவி – வேதியியலாளர்

காலியிடங்கள்: 3

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2021 அன்று 30 வயது நிறைவு செய்திருக்கவேண்டும். SC,BC,SC(A), ST, MBC(V), MBC DNC, MBC,மற்றும் BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

M.Sc (Chemistry / Chemical Technology / Industrial Chemistry) இதில் ஏதேனும் ஒன்றில் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை.

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு | நாள் :19.03.2022

இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய் 150-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் தேவையில்லை.

தேர்வுக்கட்டணம்: ரூ.150

மேலும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பமுறை:

இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கடைசி தேதி:

உதவி இயக்குனர் மீன்வளத்துறை : 21.01.2022
வேதியியலாளர்: 23.01.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2022 Notification, Application – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles