Thursday, November 14, 2024

TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், தமிழ் மொழித்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு

தமிழகத்தில் அரசு பணிகளுக்காக நடைபெறும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் TNPSC குரூப் 2, 2A மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான தமிழ் மொழி கட்டாய தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC மூலம் போட்டித் தேர்வுகளுக்கான TNPSC Annual Planner 2022, TNPSC Time Table கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு 2022 பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி அரசு போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் மற்றும் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Group 2 New Syllabus

தற்போது குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 பாடத்திட்டம், விதிமுறை, தமிழ் மொழித்தேர்வு முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக இருக்கும்.

அதற்க்கான புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC New Syllabus (Revised) and Model Question Paper – Download

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles