Saturday, September 7, 2024

திருச்சி மாவட்டத்தில் மாபெரும் ஆன்லைன் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு முகாம். தமிழக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த முகாம் முழுவதும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே வேலை தேடும் பட்டதாரி இளைஞ்ர்கள் இந்த வாய்ப்பினை முழுவதுமாக பயன்படுத்தி கொண்டு வேலையை பெற்று கொள்ளலாம் அதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு 2021

நம் நாட்டில் வேலையின்மை சற்று போக்குவதற்கு தான் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் இணைந்து அவவ்வப்போது நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்கள். இதில் பல தனியார் நிறுவங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியுடைய பட்டதாரிகள் மற்றும் மேல்நிலை 12th வரை படித்தவர்களை தங்கள் நிறுவனத்துக்கு வேலைக்கு எடுத்து கொள்வார்கள்.

இந்நிலையில் திருச்சியில் தற்போது தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் படித்த பட்டதாரிகள் கலந்து கொண்டு பணியை பெற வாய்ப்புகள் உள்ளது.

முழு விவரங்கள்

இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்ப இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

10, 12 -ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, Engineering மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதும் இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் ஆன்லைனில் வரும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உள்ளே இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

Registration – Click Here

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles