Saturday, September 7, 2024

TNPSC தேர்விற்கு தமிழ்நாடு அரசு ஆன்லைனில் இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வங்கி வேலை மற்றும் காவல்துறை தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, தற்போது தமிழ்நாடு அரசு ஆன்லைனில் இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் கனவுடனும் தயாராகி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த சரியான பயிற்சிகளை அளிப்பதற்காக, தற்போது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத்துறை மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் தினமும் நடத்தப்படுகிறது.

தற்போது, இந்த கொரோனா தொற்று சூழல் காரணமாக, நேரடி வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் உள்ள நிலையில் இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக வேலைவாய்ப்புத்துறை நடத்துவது தேர்வர்களுக்கிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே 05-07-2021 முதல் இணையவழியில் நடந்துவருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர கட்டணம் இல்லை.

தினசரி ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மற்றும் மாலை 2 முதல் 4 மணி வரையிலும் நடக்கிறது.

TNPSC free Online Coaching by government 2021 இலவச பயிற்சி வகுப்பில் எப்படி சேருவது?

தேர்வர்கள் CISCO WEBEX இணையதள பக்கம் அல்லது CISCO App மூலமாக கலந்துக் கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி இணையதளத்திற்கு https://tamilnaducareerservices.tn.gov.in/ சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இதில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராக தேவையான பாட குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினா விடைகள் போன்றவையும் உள்ளன.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles